புத்தகத்துக்குள் ஒரு புத்தகம் -- புது டெக்னிக். ஜெர்மன் நாவலாசிரியர் சாஷா ஸ்டானிஷிக் நாவல் " கிராமபோனை போர்வீரன் பழுது பார்ப்பது எப்படி?" நாவலை நான் படித்துக் கொண்டே வரும்போது அதில் ஒரு கதாபாத்திரம் ஒரு புத்தகம் எழுதுகிறது. அதன் தலைப்பு : " எல்லாம் சரியாக இருக்கிறபோது" என்பதாக இருக்கிறது.அதனைத் தன் நாவலின் நடுவே இன்னொரு புத்தகமாகப் போடுகிறார்.அதன் முதல் பக்கம், ஆசிரியன் பெயர், பாட்டிக்கு சமர்ப்பணம், முன்னுரை,உள்ளடக்கம் என்று அது ஒரு தனியான புத்தகமாகவே வருகிறது.புத்தகத்துக்குள் ஒரு புத்தகம்.தன் புத்தகத்தை நடுவில் படித்து விட்டு பிறகு முதலிலிருந்து தொடங்கியும் படிக்கலாம் என்று குறிப்பிடுகிறார். தமிழில் நாவல் எழுதும் இளைய சக்திகள் தங்கள் நாவல் ஒன்றில் இதைப் பயன்படுத்திப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று ஒரு யோசனை ஓடியது. -- எனது " தோட்டத்து மேசையில் பறவைகள்" நூலிலிருந்து.
No product review yet. Be the first to review this product.